/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே தீப்பிடித்துஎரிந்த எலக்ட்ரானிக் பைக்
/
கரூர் அருகே தீப்பிடித்துஎரிந்த எலக்ட்ரானிக் பைக்
ADDED : மார் 16, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் அருகே தீப்பிடித்துஎரிந்த எலக்ட்ரானிக் பைக்
கரூர்:கரூர் அருகே, டீக்கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எலக்ட்ரானிக் பைக் தீப்பிடித்து எரிந்தது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 50. இவர் நேற்று, வெள்ளியணை சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள, டீக்கடை முன்புறம் எலக்ட்ரானிக் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரத்தில் பைக், கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட, வெப்பம் காரணமாக எலக்ட்ரானிக் பைக், தீப்பிடித்து எரிந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.