/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நுாலக கட்டடத்தை சுற்றிபுதரால் வாசகர்கள் அச்சம்
/
நுாலக கட்டடத்தை சுற்றிபுதரால் வாசகர்கள் அச்சம்
ADDED : மார் 18, 2025 01:41 AM
நுாலக கட்டடத்தை சுற்றிபுதரால் வாசகர்கள் அச்சம்
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் கிராமத்தில், நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாயத்து நுாலகத்தை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நுாலக கட்டடத்தை சுற்றி, அதிகமான முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இந்த புதரில் இருந்து அடிக்கடி பாம்புகள் சுற்றித்
திரிகின்றன. இதனால் நுாலகத்துக்கு வரும் வாசகர்கள், எங்கேனும் பாம்பு பதுங்கி இருக்குமோ என்ற அச்சத்திலேயே புத்தகத்தை படித்து செல்கின்றனர். இதனால் அசவுகரியமாக உணர்கின்றனர். எனவே, பஞ்சாயத்து நுாலக கட்டடத்தை சுற்றி வளர்ந்துள்ள முள் புதரை அகற்றி, துாய்மைப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.