/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று பெருமாள் கோவிலில்மகா கும்பாபிேஷக விழா
/
இன்று பெருமாள் கோவிலில்மகா கும்பாபிேஷக விழா
ADDED : மார் 20, 2025 01:16 AM
இன்று பெருமாள் கோவிலில்மகா கும்பாபிேஷக விழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் அக்ரஹாரத்தில் ஹிந்துசமய அறநிலைய துறை கட்டுப்பட்டில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவில் புனரமைப்பு பணிகளை செய்த பின் பக்தர்கள், புரவலர்கள், கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபி ேஷகம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த, 17ல் அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.
கடந்த, 18ல் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தில், யாக சாலையில் வைத்து வேத மந்திரங்கள் முழங்கினர். இன்று காலை 10:00 மணியளவில் யாக சாலை பூஜை முடிக்கப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம்
நடக்கிறது.