தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பங்குனி மாத அமாவாசைபரமேஸ்வரி அம்மனுக்குசிறப்பு அலங்காரம்

பங்குனி மாத அமாவாசைபரமேஸ்வரி அம்மனுக்குசிறப்பு அலங்காரம்

பங்குனி மாத அமாவாசைபரமேஸ்வரி அம்மனுக்குசிறப்பு அலங்காரம்


ADDED : மார் 30, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பங்குனி மாத அமாவாசைபரமேஸ்வரி அம்மனுக்குசிறப்பு அலங்காரம்

கரூர்:புன்னம்சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், பங்குனி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அலங்கார பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருகாடுதுறை மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களிலும், பங்குனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us