ADDED : ஏப் 01, 2025 01:26 AM
விதை தரம் அறிய பரிசோதனை அவசியம்
கரூர்:விதை தரம் மற்றும் ஈரப்பதம் அறிந்து கொண்டு சேமிக்குமாறு, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ரமேஷ்குமார், வேளாண் அலுவலர் அபர்ணா தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:சேமிப்பு பூஞ்சைகளின் தொற்று வராமல் தவிர்த்தலே, பூஞ்சை நச்சுக்களின் பாதிப்பை தடுக்கும் சிறந்த வழியாகும். அதனால், சேமிப்பிற்கு முன்னர் விதைகளை அல்லது தானியங்களை நன்கு உலர்த்தி, சரியான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். மேலும் பூச்சி மற்றும் நோய் பாதித்த விதைகளை பிரித்தெடுத்து, நல்ல சுத்த மான பூச்சிகள் உட்புக வாய்ப்பற்ற சேமிப்பு கலன்களில் சேமிக்க வேண்டும். அதே போல், சரியான ஈரப்பதத்தில் பயிர்களை அறுவடை செய்தல் வேண்டும்.
நன்றாக சுத்தப்படுத்தக்கூடிய மற்றும் தானியங்களில் பாதிப்பை ஏற்படுத்தாத, அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்கு
தலற்ற நன்கு சுத்தப்படுத்தப்பட்ட விதைகள் அல்லது தானியங்களையே சேமிக்க வேண்டும். சேமிப்பு கலன்களில் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அதிகமாகாத வகையில், நல்ல காற்றோட்டத்துடன் இருத்தல் வேண்டும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் சேமித்து வைத்த, தங்களிடமுள்ள விதைகளை விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய்- ஆய்வு கட்டணமாக செலுத்தி கரூர் காந்திகிராமம், தின்னப்பா நகர் முதல் தெருவிலுள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து விதையின் தரம் அறிந்து விதைக்கவும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

