/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடங்கிபட்டி பகுதியில்மாடு மாலை தாண்டும் விழா
/
கோடங்கிபட்டி பகுதியில்மாடு மாலை தாண்டும் விழா
ADDED : ஏப் 02, 2025 01:41 AM
கோடங்கிபட்டி பகுதியில்மாடு மாலை தாண்டும் விழா
குளித்தலை,:குளித்தலை அடுத்த, மாவத்துார் பஞ்., கோடங்கிபட்டி மாலைமேட்டு பகுதியில் கோடங்கிப்பட்டி, மணக்காட்டுநாயக்கனுார், கூனமநாயக்கனுார், காமாநாயக்கனுார், கம்பளிநாயக்கனுார் ஆகிய ஐந்து கிராமங்களில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு கோப்பனார் சுவாமி, கன்னிமார் சுவாமி, வரதராஜ பெருமாள், குட்டைக்கோவில் சுவாமி கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களுக்கு, மாலை தாண்டும் திருவிழா நடத்த மந்தா நாயக்கர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
கடந்த எட்டு நாட்களாக, இப்பகுதி மக்கள் விரதம் இருந்து, தினமும் மூன்று கால பூஜை செய்து வழிபட்டு வந்தனர். பொதுமக்கள் சார்பாக சுவாமி
களுக்கு பொங்கல், மாவு வைத்து படைக்கப்பட்டது.பின்னர் கடந்த, 30ம் தேதி கோவில் முன்பாக, அனைத்து மந்தைகளின் சலை எருது மாடு
களுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு, தாரை தப்பட்டைகள் முழங்க கோவில் எதிரே, 2 கி.மீ., தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். எல்லை கோட்டை நோக்கி சலை எருது மாடுகள் ஓடி வந்தன.
இதில் முதலாவதாக, அரவக்குறிச்சி அருகே உள்ள செம்பகனம் எரகாமிநாயக்கர் மந்தை மலை சலை எருது மாடும், இரண்டாவதாக புதுக்கோட்டை மாவட்டம், சேமங்களம் அய்யாசீமை நாயக்கர் மந்தை மாடும் வெற்றியின் எல்லைக்
கோட்டை தாண்டி ஓடியது.

