/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுக்காலியூர் சாலையோரம் மணல்அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
/
சுக்காலியூர் சாலையோரம் மணல்அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
சுக்காலியூர் சாலையோரம் மணல்அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
சுக்காலியூர் சாலையோரம் மணல்அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 04, 2025 01:05 AM
சுக்காலியூர் சாலையோரம் மணல்அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
கரூர்:கரூர், திருமாநிலையூர் சுக்காலியூர் சாலை வழியாக திருச்சி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரை, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், கரூர் நகரில் நுழையாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.
திருமாநிலையூர் முதல் சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், பண்டுதகாரன்புதுார் போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தடுப்பு சுவர் ஓரம் காற்றின் காரணமாக அதிகளவு மணல் பரவி கிடப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்புச் சுவரை ஒட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, சுவர் பகுதியில் பரவியுள்ள மணல்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.