/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை அகற்றும் பணி தீவிரம்
/
மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை அகற்றும் பணி தீவிரம்
ADDED : ஏப் 06, 2025 01:47 AM
மரவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை அகற்றும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியனில், பயிரிட்டுள்ள மரவள்ளியில் வளர்ந்துள்ள களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, கந்தன்குடி, குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, வயலுார், பஞ்சப்பட்டி, கணக்கம்பட்டி ஆகிய பகுதிகளில், மரவள்ளி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கடந்த மாதம், மரவள்ளி குச்சிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது இலைகள் வளர்ந்து செழித்து காணப்படுகிறது. அதனுடன் சேர்ந்து களைகளும் வளர்ந்துள்ளன.
இந்த களைகள், மரவள்ளி வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளன. இதனால் விவசாய கூலி தொழிலாளர்கள் மூலம் மரவள்ளி வயல்களில் களைகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இதை தொடர்ந்து மழை பெய்யும்பட்சத்தில், மரவள்ளி செடிகள் வளர எந்த தடையும் இருக்காது. இன்னும் ஒருவாரத்திற்கு, களை அகற்றும் பணி நடக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

