/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்காய் தோட்டத்தில்மயங்கி விழுந்து பெண் பலி
/
தேங்காய் தோட்டத்தில்மயங்கி விழுந்து பெண் பலி
ADDED : ஏப் 08, 2025 01:46 AM
தேங்காய் தோட்டத்தில்மயங்கி விழுந்து பெண் பலி
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, தேங்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், புன்னம் பகுதியை சேர்ந்த பொத்தான் என்பவரது மனைவி பார்வதி, 55; இவர் வேலாயுதம்பாளையம் அருகே, பழமாபுரம் பகுதியில், சேகர் என்பவரது தேங்காய் தோட்டத்தில் தங்கி கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேங்காய் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்த பார்வதி திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் பார்வதியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.