/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரகம்பட்டி அரசு கல்லுாரியில்இரண்டாவது பட்டமளிப்பு வி
/
தரகம்பட்டி அரசு கல்லுாரியில்இரண்டாவது பட்டமளிப்பு வி
தரகம்பட்டி அரசு கல்லுாரியில்இரண்டாவது பட்டமளிப்பு வி
தரகம்பட்டி அரசு கல்லுாரியில்இரண்டாவது பட்டமளிப்பு வி
ADDED : ஏப் 10, 2025 01:19 AM
தரகம்பட்டி அரசு கல்லுாரியில்இரண்டாவது பட்டமளிப்பு விழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.
வணிகவியல் துறை தலை வர் பத்மநாபன், கணினி அறிவியல் துறை தலைவர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பாளராக பங்கேற்ற கல்லுாரி முன்னாள் ஓய்வு பெற்ற முதல்வர் ஹேமா நளினி, 110 மாணவர்கள், 103 மாணவியர் என மொத்தம், 213 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவியர் வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத நாளாக, வரலாற்று பதிவு நாளாக அமைந்திருக்கிறது. பட்டம் பெறுவதற்காக வந்திருக்கும் பெரும்பாலான மாணவர்கள், தங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிலையை அடைந்து உள்ளீர்கள். இதனால் பெற்றோர்கள் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை கண்டு பேராசிரியர்களும் பெருமைப்படுகிறோம். பட்டம் பெற்ற மாணவர்கள், இடையில் நின்று விடாமல் தொடர்ந்து மேல்படிப்பு பயின்று, பல்வேறு சாதனைகளை அடைய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

