/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சடையம்பட்டி செல்லும் சாலைபுதுப்பிக்கும் பணி துவக்கம்
/
சடையம்பட்டி செல்லும் சாலைபுதுப்பிக்கும் பணி துவக்கம்
சடையம்பட்டி செல்லும் சாலைபுதுப்பிக்கும் பணி துவக்கம்
சடையம்பட்டி செல்லும் சாலைபுதுப்பிக்கும் பணி துவக்கம்
ADDED : ஏப் 10, 2025 01:19 AM
சடையம்பட்டி செல்லும் சாலைபுதுப்பிக்கும் பணி துவக்கம்
கிருஷ்ணராயபுரம்:சிவாயம் பஞ்சாயத்து, சடையம்பட்டி பகுதி செல்லும் சாலை புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரும்பூதிப்பட்டி, சந்தையூர் பகுதியில் இருந்து அய்யர்மலை, சடையம்பட்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக, வாகனங்களில் அய்யர்மலை சிவன் கோவிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருந்தது.
இந்நிலையில், சாலையை புதுப்பிக்கும் வகையில் கடந்த வாரத்தில் குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில் சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அதன்படி நேற்று சந்தையூர் முதல், சடையம்பட்டி வரை பழுதடைந்துள்ள சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு பறிக்கும் பணிகள் துவங்கின. இப்பணி முடிந்ததும் ஜல்லி கற்கள் கொண்டு சாலை பணி நடக்கிறது.