/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலை வாய்ப்பு இல்லாதவர்கள்உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
வேலை வாய்ப்பு இல்லாதவர்கள்உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பு இல்லாதவர்கள்உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பு இல்லாதவர்கள்உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 10, 2025 01:34 AM
வேலை வாய்ப்பு இல்லாதவர்கள்உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர்:வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், படித்து முடித்து பதிவு செய்து, வேலை வாய்ப்பு கிடைக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக, உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய், பிளஸ 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர், 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
இத்தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.