/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செடல் மாரியம்மன் கோவில்திருவிழா; பக்தர்கள் தரிசனம்
/
செடல் மாரியம்மன் கோவில்திருவிழா; பக்தர்கள் தரிசனம்
செடல் மாரியம்மன் கோவில்திருவிழா; பக்தர்கள் தரிசனம்
செடல் மாரியம்மன் கோவில்திருவிழா; பக்தர்கள் தரிசனம்
ADDED : ஏப் 11, 2025 01:24 AM
செடல் மாரியம்மன் கோவில்திருவிழா; பக்தர்கள் தரிசனம்
குளித்தலை:குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி பஞ்., கோவில்பட்டியில், 18 பட்டி கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட செடல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், லட்சுமி, பெருமாள் ஆகிய பரிவார கோவில்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும், 18 பட்டி கிராம மக்கள் சார்பாக, கோவிலில் திருவிழா நடத்தி வழிபடுவது வழக்கம்.
இதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில், 18 பட்டி நாட்டாமைகள் காவிரி ஆற்றில் நீராடினர். பின் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து, கம்பம் வைத்து திருவிழாவை துவக்கினர். அன்று முதல், கிராம மக்கள் விரதம் இருந்து செடல் மாரியம்மனை வழிபட்டு வந்தனர்.
தாரை, தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் மின் அலங்காரம் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கில் செடல் மாரியம்மன் திருவீதி உலா வந்தது. பொது மக்கள் சிறப்பு அபி ேஷகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, தேன், திருமஞ்சனம் உள்பட, 16 வகையான திரவிய அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, மஞ்சள் நீராட்டுடன் கம்பத்தை ஊர்வலமாக அழைத்து சென்று, கோவில் கிணற்றில் கரைத்து சுவாமிகளுக்கு விடையாற்றி நிகழச்சி நடந்தது.