/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஏப் 15, 2025 02:05 AM
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூர்:கரூர் மாவட்ட, அ.தி.மு.க., இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில், அம்மா பிரிமியர் லீக் டர்ப் கிரிக்கெட் போட்டி, பெரிய குளத்துப்பாளையத்தில் நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் இருந்து, 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. அதில், முதலிடத்தை பிளாக் ஸ்குவாட் அணியும், இரண்டாமிடத்தை டி.சி.சி., அணியும், மூன்றாவது இடத்தை எம்.ஆர்.வி., பாய்ஸ் அணியும், நான்காவது இடத்தை ஏ.கே.சி.சி., அணியும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை, மாவட்ட அ.தி.மு. க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், ஜெ.,பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், பகுதி செயலாளர் சேரன் பழனிசாமி உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.