/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புத்துாரில் இந்திய கம்யூ.,கட்சி ஒன்றிய கூட்டம்
/
புத்துாரில் இந்திய கம்யூ.,கட்சி ஒன்றிய கூட்டம்
ADDED : ஏப் 16, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்துாரில் இந்திய கம்யூ.,கட்சி ஒன்றிய கூட்டம்
குளித்தலை:குளித்தலை அடுத்த, புத்துாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, ஒன்றிய இடைக்கமிட்டி கூட்டம் நிர்வாகி மலர்கொடி தலைமையில் நடந்தது.
ஒன்றிய செயலர் மாரியப்பன், துணை செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்துார் வி.ஆர்.ஓ காலனிக்கு, 45 ஆண்டுகளை கடந்தும் இதுவரை அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவில்லை. புத்துார் மலைவளந்தம்மன் கோவில் மேல்புறத்தில், சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் மாரியப்பன், பழனிசாமி, மல்லிகா, தவசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

