/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி பலகாரங்கள் தரமானதா கண்காணிக்க வலியுறுத்தல்
/
தீபாவளி பலகாரங்கள் தரமானதா கண்காணிக்க வலியுறுத்தல்
தீபாவளி பலகாரங்கள் தரமானதா கண்காணிக்க வலியுறுத்தல்
தீபாவளி பலகாரங்கள் தரமானதா கண்காணிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 17, 2025 02:07 AM
அரவக்குறிச்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் தரமானதா என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்காக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம் மற்றும் பல இடங்களில் உள்ள கடைகளுக்கு சென்று இனிப்பு, கார வகைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் பலர் வாங்கி செல்கின்றனர்.
உணவு பொருட்கள் தரமானதா என மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு இடங்களை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நிர்வாகம் ஆய்வு செய்து சுத்தமான குடிநீர், தரமான உணவு சமையல் எண்ணெய், நெய், சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் தரமானதாகவும், சுத்தமான பொருட்களை மட்டும் வாங்கி பயன்படுத்தப்படுகிறதா என, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.