தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் தடகளத்தில் முதலிடம்

பள்ளப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் தடகளத்தில் முதலிடம்

பள்ளப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் தடகளத்தில் முதலிடம்


ADDED : ஆக 06, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அரவக்குறிச்சி ஒன்றிய அளவிலான தடகள போட்டிகள், குளத்துப்பாளையத்தில் உள்ள ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், அரவக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பல்வேறு தடகள பிரிவுகளில் பரிசு பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோர் நீளம் தாண்டுதலில், மாணவன் பிரகதீஸ்வரன், முதலிடம்; 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், முதலிடம் பெற்றார்.

அரவிந்த் என்ற மாணவர், 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், மூன்றாமிடம், சஞ்சய் என்ற மாணவர், குண்டு எறிதல் போட்டி

யில் மூன்றாமிடம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், மூன்றாமிடம் வென்றார். இதேபோல், 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, 67 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us