ADDED : ஆக 06, 2026 06:35 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த சிந்தலவாடி பஞ்., புனவாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்
ராஜன், 45; பால் வியாபாரி. இவருக்கு, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இதில் மூத்த மகள் தீபிகா, 18, கரூர் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி.,
இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், கல்லுாரிக்கு
சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்தார். பெற்றோர் தோட்டத்திற்கு
சென்றிருந்தனர். இரவு, 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்த பெற்றோர்
பார்த்தபோது, சேலையில் துாக்கிட்டு தீபிகா சடலமாக கிடப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மகளை மீட்டு,
குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு
கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தீபிகா ஏற்கனவே
இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
