/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராவல் மண் கடத்தல் 2 லாரி டிரைவர்கள் கைது
/
கிராவல் மண் கடத்தல் 2 லாரி டிரைவர்கள் கைது
ADDED : மார் 08, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராவல் மண் கடத்தல் 2 லாரி டிரைவர்கள் கைது
குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை அரசு பள்ளி அருகே, அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்துவதாக, குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரிக்கு புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, டிப்பர் லாரியில், தலா, இரண்டு யூனிட் ஓடை மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரி டிரைவர்களான, கிருஷ்ணராயபுரம் தாலுகா, சின்ன குளத்துார் பகுதியை சேர்ந்த ஆட்டையப்பன், 45, பெரிய மலையாண்டிபட்டியை சேர்ந்த பொன்னுசாமி, 40, ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், மண்ணுடன், இரண்டு லாரியை பறிமுதல் செய்தனர்.