/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உட்பட21 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உட்பட21 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உட்பட21 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உட்பட21 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : ஏப் 05, 2025 01:44 AM
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் உட்பட21 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
கரூர்:சேலம், நாமக்கல், கரூர் உள்பட, 21 மாவட்டங்களில் கடந்தாண்டு மார்ச் மாதத்தை காட்டிலும், நிலத்தடி நீர்மட்டம் பரவலாக அதிகரித்து உள்ளதாக, அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், பெரும்பாலான பகுதிகளில் போதிய மழை கிடைத்தாலும், 80 சதவீதம் பேர் குடிநீருக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். வேளாண் பாசனத்துக்கு, 3-ல் 2 பங்கு பேர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் கீழ், நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர்மட்டம் குறித்து, தமிழகத்தில் உள்ள, 4,016க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கிணறுகளில் ஆய்வு நடத்தப்படுகிறது.
இதில், கடந்தாண்டு மார்ச்சை விட, பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில், 3.63 மீட்டர், கடந்தாண்டு மார்ச் மாதத்தை விட அதிகரித்துள்ளது. பெரம்பலுாரில், 2.29 மீட்டர், நாமக்கல்லில், 2.15 மீட்டர், திருச்சியில், 2.02 மீட்டர், திருவண்ணாமலையில், 1.58 மீட்டர், சேலத்தில், 1.36 மீட்டர், திருப்பத்துார், 1.22 மீட்டர், சிவகங்கை, 1.07 மீட்டர் உயர்ந்துள்ளது. மேலும் திருவள்ளூரில், 0.89 மீட்டர், திருவாரூரில், 0.52 மீட்டர், கன்னியாகுமரியில், 0.46 மீட்டர், வேலுாரில், 0.57 மீட்டர், அரியலுாரில், 0.38 மீட்டர், கரூரில், 0.35 மீட்டர் உள்பட, 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மாறாக திருநெல்வேலியில், 1.79 மீட்டர், ஈரோட்டில், 1.47, தஞ்சாவூரில், 1.23, விருதுநகரில், 1.09, செங்கல்பட்டில், 0.69, புதுக்கோட்டையில், 0.60, கோவையில், 0.29, திருப்பூரில், 0.29, திண்டுக்கல்லில், 0.24, கிருஷ்ணகிரியில், 0.21 மீட்டர் உள்பட, 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்த மாவட்டங்களில், தண்ணீரின் உப்பு தன்மை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாது என்றும், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், சாகுபடிகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, தண்ணீர் பிரச்னை இருக்காது என, வேளாண்துறையினர் கூறுகின்றனர்.