/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றி 3 'டாஸ்மாக்' கடை பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கலெக்டரிடம் புகார்

ADDED : ஜூலை 02, 2024 06:44 AM
கரூர் : 'கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி உள்ள டாஸ்மாக் கடை-களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்' என, வன்னியர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி, மூன்று டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்திவிட்டு, பலர் பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர். பயணிகள் நிற்கும் இடங்களில் படுத்து உறங்குவது, அந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, ஆபாச வார்த்தைகளால் பேவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் பெண்களிடம், மதுகுடிப்பவர்கள் அத்து-மீறி நடந்து கொள்கின்றனர்.
கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த பெண்ணிடம், 'குடிமகன்' தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ வைரலானது. பஸ் ஸ்டாண்ட் சுற்றி உள்ள கடைகளில், 24 மணி மது விற்பனை நடக்கிறது. அங்கு மது அருந்து விட்டு வரும் நபர்களால், பெண்-களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது. இந்த டாஸ்மாக்-களை வேறு இடத்திற்க மாற்ற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.