/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆப்ரேட்டரை வழி மறித்து ரூ.35 ஆயிரம் பறித்த இருவர்
/
ஆப்ரேட்டரை வழி மறித்து ரூ.35 ஆயிரம் பறித்த இருவர்
ADDED : பிப் 08, 2025 12:55 AM
ஆப்ரேட்டரை வழி மறித்து ரூ.35 ஆயிரம் பறித்த இருவர்
குளித்தலை: பொக்லைன் வாகன ஆப்ரேட்டரை வழி மறித்த இருவர், ரூ.35 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.
குளித்தலை அடுத்த, மத்தகிரி பஞ்.. பள்ளி கவுண்டனுாரை சேர்ந்தவர் பொக்லைன் வாகன ஆப்ரேட்டர் சண்முகம், 23. இவர் கடந்த, 5ல், திருச்சி எடமலைப்புத்துாரில் இருந்து, 35 ஆயிரத்து 500 ரூபாயுடன், தனது ஸ்பிளண்டர் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பூலாங்குளத்துபட்டி- புழுதேரி நெடுஞ் சாலையில், ஆடிட்டர் ஜெயராமன் தோட்டம் அருகே வந்த போது, பின்னால் பைக்கில் வந்த இருவர் வழி மறித்து, பேன்ட் பாக்கெட்டில் இருந்த, 35 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து சண்முகம் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்.