sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் நகராட்சி பதவிகள் தேர்தல் 48 வார்டில் அ.தி.மு.க., போட்டி

/

கரூர் நகராட்சி பதவிகள் தேர்தல் 48 வார்டில் அ.தி.மு.க., போட்டி

கரூர் நகராட்சி பதவிகள் தேர்தல் 48 வார்டில் அ.தி.மு.க., போட்டி

கரூர் நகராட்சி பதவிகள் தேர்தல் 48 வார்டில் அ.தி.மு.க., போட்டி


ADDED : அக் 06, 2011 03:23 AM

Google News

ADDED : அக் 06, 2011 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் நகராட்சி தேர்தலில் 48 வார்டுகளிலும் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு வார்டுகளில் தி.மு.க.,வும் வேட்பாளர்கள் யாரையும் போட்டியிட யாரையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கரூர் நகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றுள்ளது. அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் 25 மற்றும் 43 ஆகிய இரண்டு வார்டுகளில் தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. 25வது வார்டில் காங்., கட்சியை எதிர்த்தும், 43வது வார்டில் தே.மு.தி.க., வை எதிர்த்தும் அ.தி.மு.க., களத்தில் உள்ளது. அதேபோல் 33 வார்டுகளில் ம.தி.மு.க.,வும், 29 வார்டுகளில் காங்.,கட்சியும், 46 வார்டுகளில் பா.ம.க.,வும், ஏழு வார்டுகளில் தே.மு.தி.க.,வும், 43 வார்டுகளில் பா.ஜ.,வும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை

கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ள ம.தி.மு.க., 5, 7, 11, 18, 19, 22, 23, 28, 30, 31, 32, 35, 39, 42, 47 ஆகிய 15 வார்டுகளிலும், காங்., கட்சி 2, 3, 4, 6, 11, 12, 13, 14, 15, 19, 20, 23, 24, 29, 33, 34, 43, 46, 47 ஆகிய 19 வார்டுகளிலும், பா.ஜ., 1,5,11,39,44 ஆகிய ஐந்து வார்டுகளிலும், பா.ம.க., 44,45 ஆகிய இரண்டு வார்டுகளிலும் போட்டியிடுகிறது. தே.மு.தி.க., 7, 25, 27, 39, 40, 42, 48 ஆகிய ஏழு வார்டுகளை தவிர்த்து மீதமுள்ள 41 வார்டுகளில் போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தாத மார்க்சிஸ்ட் கட்சி 2,7, 24, 39, 40 ஆகிய ஐந்து வார்டுகளிலும், இ.கம்யூ., கட்சி 11, 25, 30, 44 ஆகிய நான்கு வார்டுகளிலும் போட்டியிடுகிறது. அதிகப்பட்சமாக 36 வது வார்டில் 12 பேரும், குறைந்தப்பட்சமாக 12, 34 மற்றும் 43 வது வார்டுகளில் மூன்று பேரும் களத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us