ADDED : மார் 15, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலையில் 7 டூவீலர் பறிமுதல்
குளித்தலை:குளித்தலை எஸ்.ஐ., சரவணன் கிரி நேற்று முன்தினம் இரவு, குளித்தலை பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பதிவு எண் கொண்ட, முகவரி தெரியாத யாரும் உரிமை கோரப்படாத நிலையில், சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த, ஏழு டூவீலர்கள் கைப்பற்றப்பட்டது. அக்கம் பக்கம் விசாரித்தும், அதன் உரிமையாளர் யார் என்று தெரியாத நிலையில், பதிவு செய்து, வாகனங்களை குளித்தலை தாசில்தார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.