/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் மேல்நிலை பள்ளியில் 75ம் ஆண்டு வைர விழா
/
மகளிர் மேல்நிலை பள்ளியில் 75ம் ஆண்டு வைர விழா
ADDED : ஜன 11, 2025 01:33 AM
மகளிர் மேல்நிலை பள்ளியில் 75ம் ஆண்டு வைர விழா
குளித்தலை,: குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கி, 75 ஆண்டுகள் நிறைவு பெற்று வைர விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு சிறப்பாளராக, குளித்தலை சப்-கலெக்டர்  சுவாதிஸ்ரீ   தேசிய கொடி ஏற்றி வைத்து, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சர்வதேச தடகள செயலாளர் கரூர் பெருமாள், கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர். மாலையில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார்.
அரியலுார், மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் பவித்ரா, குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, பள்ளி எஸ்.எம்.சி., குழுத் தலைவி ஹேமலதா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி இந்துமதி, கலைமகள் மெட்ரிக் பள்ளி முதல்வர் ரம்யா கருணாநிதி, முன்னாள் ஆசிரியர்கள் கோவிந்தராஜன், பரிமளா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாணவியரின் நாடகம். நடனம், பாட்டு பாடுதல், பரத  நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரம் வளர்த்தல், மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல் கல்வியின் முக்கியத்துவம், புத்தகத்தை முறையாக பயன்படுத்ததல்,  தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவிகளும் ஆங்கிலத்தில் பேசி, நாடகங்கள் வாயிலாக ஆங்கில புலமையை வெளிப்படுத்தினர்.

