/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: 770 காளைகள் பங்கேற்பு
/
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: 770 காளைகள் பங்கேற்பு
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: 770 காளைகள் பங்கேற்பு
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: 770 காளைகள் பங்கேற்பு
ADDED : ஜன 17, 2025 01:46 AM
ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: 770 காளைகள் பங்கேற்பு
கரூர்,: குளித்தலை அருகே ராசாண்டர் திருமலையில், (ஆர்.டி.மலை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை, நேற்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
இது குறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போட்டியில், 770 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் அரசு விதி
முறைகளின்படி பதிவு செய்து பங்கேற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் சார்பில், சிறந்த காளைக்கு கார் பரிசாகவும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் காளைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.முன்னதாக, மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், குளித்தலை சப்-
கலெக்டர் சுவாதி ஸ்ரீ உள்பட பலர் பங்கேற்றனர்.* மதுரை மாவட்டம், செக்கான் ஊரணியை சேர்ந்த காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளர் கதிரவனுக்கு ஆல்டோ கார் பரிசாகவும், 21 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இரு சக்கர வாகனத்தையும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். ஜல்லிக்கட்டு விழாவில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த, 396 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.