/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி வெள்ளம் சேர்த்த மணலை காசாக்க காத்திருக்கும் கும்பல்
/
காவிரி வெள்ளம் சேர்த்த மணலை காசாக்க காத்திருக்கும் கும்பல்
காவிரி வெள்ளம் சேர்த்த மணலை காசாக்க காத்திருக்கும் கும்பல்
காவிரி வெள்ளம் சேர்த்த மணலை காசாக்க காத்திருக்கும் கும்பல்
ADDED : ஆக 08, 2024 06:56 AM
கரூர : காவிரி வெள்ளம் கொண்டு வந்த மணலை, காசாக்க காத்தி-ருக்கும் கும்பலை தடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றில் நன்னியூர், மல்லப்பா-ளையம் ஆகிய இடங்களில் பொதுப்பணிதுறை சார்பில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. கடந்த அக்.,ல் அமலாக்க
துறையின் ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் மூடப்பட்டன. சில மாதங்கள் மாட்டு வண்டிகள் மூலம் திருட்டு மணல் அள்ளி, லாரிகளில் ஏற்றி செல்வது நடந்தது. நெரூர், புதுப்பாளையம், நன்னியூர், செவந்திபாளையம், தவுட்டு
பாளையம் ஆகிய பகுதிகளில் மணல் கொள்ளை நடந்தது.
இங்கிருந்து தினமும், 60 முதல், 70 லாரிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு தடை-யின்றி மணல் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஆற்று பகு-தியில் களிமண் தெரியும் அளவில் சுரண்டப்பட்டதால், காவிரி வறண்ட நிலமாக காட்சி அளித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து, 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறந்த விடப்பட்டது. காவிரி வெள்ளம் ஆறடி உயரத்-துக்கு மணலை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இதனை திருடி செல்லாமல் பாதுக்க வேண்டும்.
இது குறித்து, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்-பாளர் விஜயன் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக, மணல் கொள்ளை நடத்து வருகி-றது. தவுட்டுபாளையம் உயர்மட்ட பாலம் உள்பட காவிரி ஆற்றில் செல்லும் பாலங்கள், இடிந்து விழுகின்ற அளவுக்கு பல அடி ஆழத்துக்கு மணலை அள்ளினர். இந்த பாலங்களை இனி யாரும் பாதுகாக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த-போது, காவிரியில் வந்த அதிகமான நீர்வரத்தால் மணல் பீச் போல குவிந்திருக்கிறது. அஸ்திவாரம் தெரியும் அளவுக்கு போன பாலத்தின் துாண்கள், குவிந்திருக்கும் மணல் மேட்டால் மூடப்பட்டிருக்கிறது. மணல் திட்டு காவிரியின் தென்கரை ஓரங்களில் சேர்ந்திருக்கிறது.
இந்த பகுதியில், மணல் அள்ளியதால் ஏற்பட்ட பல மரணக்குழிகள் மூடப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட பாலங்-களின் மேற்கிலும், கிழக்கிலும் மணல் மேடு உருவாகி உள்ளது. இங்கே களிமண், பாறைகள் தெரியும் அளவுக்கு மணலை அள்-ளிய கும்பல், இப்போதும் மணலை அள்ள காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, மணல் அள்ள துடிப்ப-வர்களுக்கு கடிவாளம் போட வேண்டும். இல்லையென்றால் திருச்சி, கொள்ளிடம், 6.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது போல, இந்த பாலங்கள் இடிந்துவிழும் நிலை ஏற்படலாம்.
இவ்வாறு கூறினார்.