/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
/
சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
சமுதாய நலக்கூடத்தின் பூட்டு சேதம் அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு
ADDED : பிப் 25, 2025 04:36 AM
கரூர்: கரூர் அருகே, சமுதாய நலக்கூடத்தின் பூட்டை சேதப்படுத்திய-தாக, அ.தி.மு.க., நிர்வாகி உள்பட, 10 பேர் மீது போலீசார் வழக்-குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், சணப்பிரட்டி பாதையூரில் மாநகராட்சிக்கு சொந்-தமான, சமுதாய நலக்கூடம் உள்ளது. அதில், கபடி போட்டியில் விளையாட வெளியூரில் இருந்து வந்த, வீரர்கள் நேற்று முன்-தினம் தங்கியிருந்தனர்.
தகவல் அறிந்த, கரூர் மாநகராட்சி ஊழியர்கள் வீரர்களை வெளி-யேற்றி விட்டு, சமுதாய நலக்கூடத்தை பூட்டினர். அப்போது, கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட பலர், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, 250 ரூபாய் மதிப்புள்ள பூட்டை சேதப் படுத்தியதாக, கரூர் மாநக-ராட்சி உதவி பொறியாளர் ரவி, 50, போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட, 10 பேர் மீது பசுபதிபா-ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.