/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்
/
ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்
ADDED : ஆக 01, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, தெலுங்குபட்டி காலனியை சேர்ந்தவர் மாரி-யாயி, 55. இவரது மகன் சிவக்குமார், 40, திருமணமாகி மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார். மணப்பாறையில் உள்ள டி.என்.பி.எல்., காகித ஆலையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த, 12ல் காலை 9:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியம், வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்க-வில்லை. தனது மகனை காணவில்லை என, தாய் மாரியாயி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்