நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர : கரூர், தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரில் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் அடிப்பாகத்தில் மின் இணைப்பு பெட்டி திறந்தபடி உள்ளது. ஒயர், பியூஸ் கேரியரும் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்லும் சிறுவர்கள், விளை-யாட்டுத்தனமாக திறந்து கிடக்கும் மின் பெட்டியில் உள்ள ஒயர்-களை தொட்டால் விபரீதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஆபத்தான முறையில் திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டியை பாதுகாப்பாக மூட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

