/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 06, 2024 12:13 AM
குளித்தலை : அனைத்து விவசாய சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் மருதுார் உமையாள்புரம் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டம் நிறைவேற்றிட வலியுறுத்தி, குளித்தலையில் ஆர்ப்பாட்டம் நடை-பெற்றது.
காவிரி படுகை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலை-யப்பட்டி ஜெயராமன் தலைமை வகித்தார். விவசாயிகளின் வாழ்-வாதாரம் பெருகவும், குடிநீர் தட்டுப்பாடு போக்கவும், குளித்-தலை, லாலாபேட்டை மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி, தொட்-டியம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரை பகுதியில் விவசாயம் செழிக்கவும் தமிழக அரசு கதவணையை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்க பொறுப்பாளர் மகாதானபுரம் ராஜாராம், தீவிர விவசாயி திருநாவுக்கரசு, மக்கள் நல பாதுகாப்பு ஆலோசனை மைய திருச்சி, கரூர், திருப்பூர் மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், செல்வராஜ், சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அரசை வலியுறுத்தி, மீண்டும் மருதுார் உமையாள்-புரம் காவிரி ஆற்றில் கதவணை அமைக்க வேண்டும் என வலியு-றுத்தி பேசினர்.