/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளாறு வடிகால் வாய்க்காலை காவிரியுடன் இணைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பிளாறு வடிகால் வாய்க்காலை காவிரியுடன் இணைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பிளாறு வடிகால் வாய்க்காலை காவிரியுடன் இணைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பிளாறு வடிகால் வாய்க்காலை காவிரியுடன் இணைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 02, 2024 02:59 AM
கரூர்: கரூர் அருகே பிளாறு வடிகால் வாய்க்கால் தண்ணீரை, நேரிடை-யாக காவிரியாற்றில் கலக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்க்-கின்றனர்.
கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையில் இருந்து தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டுவாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் என, நான்கு வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த
வாய்க்கால் பாசன பகுதி-களில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, தென்னை சாகுபடி பணிகள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில், அந்த பகு-திகளில் உள்ள விவசாய நிலங்களில் அதிகப்படியாக பாயும் தண்-ணீரை
வெளியேற்றும் வகையில், பிளாறு வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த பிளாறு வடிகால் வாய்க்கால், கட்டளை மேட்டு-வாய்க்காலில், பிச்சம்பட்டி அருகே உள்ள மணற்போக்கில் துவங்கி, மேட்டு மகாதானபுரம், நந்தன்கோட்டை
வழியாக சென்று, லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே, தென்-கரை வாய்க்காலில் கலக்கிறது. ஆயிரம் ஏக்கர் நிலங்களின் முக்-கிய வடிகால் இந்த, பிளாறு வடிகால் வாய்க்கால் தான்.ஆனால், பிளாறு வடிகால் வாய்க்கால், தென்கரை வாய்க்காலில் கலக்கும் இடத்தில், தென்கரை வாய்க்கால் தண்ணீர், ஒரு கிலோ மீட்டர் துாரம் உட்புகுந்து விடுகிறது. இதனால், பிளாறு வடிகால் வாய்க்கால் தண்ணீர் அப்படியே
தேங்கி, விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. மேலும், கட்டளை மேட்டுவாய்க்காலில், மழைக்காலங்களில் செல்லும், காட்டாறு தண்ணீரும் பிளாறு வடிகால் வாய்க்காலில் சேர்ந்து விடுகிறது. இதனால், விவசாய
நிலங்களில் தண்ணீர் தேங்கி, பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:பிளாறு வடிகால் வாய்க்கால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, வயல்களுக்கு வடிகாலாக அமைந்துள்ளது. தென்கரை வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் செல்லும்போது, அதிகப்-படியான தண்ணீர் உட்புகுந்து
விடுகிறது. இந்த பிரச்னை கடந்த, 30 ஆண்டுகளாக நீடிக்கிறது. வடிகால் வாய்க்கால் வசதி இருந்தும், தண்ணீர் வயல்களில் புகுந்து விடுவதால், சேதம் ஏற்ப-டுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், தென்கரை
வாய்க்கால் தண்ணீரை, குகை வழிப்பாதை வழியாகவும், பிளாறு வடிகால் வாய்க்கால் தண்ணீரை நேரிடையாக, காவிரியாற்றில் கலக்க செய்வதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் சேதமடைவதை தடுக்க முடியும்.
இந்த பணியை தமிழக அரசு செய்யும் வகையில், கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.