/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்
/
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்
ADDED : பிப் 25, 2025 04:35 AM
கரூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77 வது பிறந்த நாள் விழா, நேற்று கரூரில் கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலை-மையில், அக்கட்சியினர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு, மாலை அணிவித்-தனர்.அதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு, பொது மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.
விழாவில், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, இணை செய-லாளர் மல்லிகா, பொருளாளர் கண்ணதாசன், ஜெ., பேரவை செய-லாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் கமலகண்ணன், பால கிருஷ்ணன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். பிறகு, அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், ரத்ததான முகாம் நடந்-தது.
* குளித்தலை அருகே, இனுங்கூர் பஞ்., அலுவலகம் முன், ஜெய-லலிதா படத்திற்கு மாலை அணிவித்து, கிழக்கு ஒன்றிய செய-லாளர் கருணாகரன் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டா-டப்பட்டது. இதேபோல் மருதுார் நகரம் சார்பில், பணிக்கம்பட்டி வார சந்தை முன் நடந்த விழாவிற்கு நகர செயலாளர் தமிழ்ச்-செல்வன் தலைமை வகித்தார்.குளித்தலை மேற்கு ஒன்றியம் சார்பில் சுங்ககேட்டில் ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம் தலைமையிலும், குளித்தலை நகரம் சார்பில் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், ஜெய ல-லிதா படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.* அரவக்குறிச்சி நகரம் சார்பில், ஏவிஎம் கார்னர் பகுதியில் வைக்-கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, நகர செயலாளர் இளமதி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியம் சார்பில், அண்ணா நகரில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு, செயலாளர் ஈஸ்வ-ரமூர்த்தி, கிழக்கு ஒன்றியம் சார்பில், தடாகோவில் பகுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு கிழக்கு ஒன்றிய செய-லாளர் கலையரசன், பள்ளப்பட்டியில், நகர செயலாளர் சாதிக் பாஷா மற்றும் நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.* கரூர் மாவட்ட, அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழு சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், மனோகரா கார்னரில் உள்ள, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.பிறகு, பொது மக்களுக்கு ஜிலேபி வழங்கப்பட்டது. விழாவில், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் கணேசன், மாவட்ட அவைத்தலைவர் திருகை கணேசன், துணை செயலாளர்கள் ஐயப்பன், ரோஜா, பொருளாளர் ஓம்சக்தி சேகர், ஐ.டி., விங்க் செயலாளர் அன்பு, மாணவர் அணி செயலாளர் மாரி உள்பட, பலர் பங்கேற்றனர்.