/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளபாளையத்தில் சமுதாய கூடம் திறப்பு
/
பள்ளபாளையத்தில் சமுதாய கூடம் திறப்பு
ADDED : ஆக 25, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,: கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்-ளபாளையத்தில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்-பாட்டு நிதியின் கீழ், 19.76 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்-பட்ட சமுதாயக்கூடம் மற்றும் அப்பிப்பாளையத்தில் கட்டப்-பட்ட பகுதி நேர ரேஷன் கடை ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

