/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து
/
சிகரெட் குடித்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து
ADDED : பிப் 25, 2025 04:37 AM
கரூர்: கரூரில், சிகரெட் குடித்ததை தட்டி கேட்ட, வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது.கரூர், ரத்தினம் சாலை கே.எம்.சி., காலனி பகுதியை சேர்ந்தவர் சாரதி, 23; இவர் கடந்த, 22ல் இரவு சிகரெட் குடித்து கொண்டி-ருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 31, என்-பவர் தட்டி கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சாரதி, அவ-ரது தந்தை காமராஜ், 48, ஆகியோர், தமிழரசன் கையில் கத்தியால் குத்தினர். அதில், காயமடைந்த தமிழரசன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, தமிழரசன் கொடுத்த புகார்படி, சாரதி, அவரது தந்தை காமராஜ் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.