/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் உத்தரவை மதிக்காத மினி பஸ் டிரைவர்கள் கரூரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
/
போலீஸ் உத்தரவை மதிக்காத மினி பஸ் டிரைவர்கள் கரூரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
போலீஸ் உத்தரவை மதிக்காத மினி பஸ் டிரைவர்கள் கரூரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
போலீஸ் உத்தரவை மதிக்காத மினி பஸ் டிரைவர்கள் கரூரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
ADDED : செப் 18, 2024 06:56 AM
கரூர்: கரூரில் போலீஸ் உத்தரவை மதிக்காமல், மினி பஸ்களை டிரைவர்கள் இயக்குகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மினி பஸ்கள், பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஜவஹர் பஜாரில் அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் பகுதியில், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் மினி பஸ்களை, பல இடங்களில் நிறுத்தி, பயணியரை டிரைவர்கள் ஏற்றி செல்கின்றனர். இதனால், மினி பஸ்களை, ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்த கூடாது என போலீசார் பலமுறை எச்சரித்தும், மினி பஸ் டிரைவர்கள் கண்டுகொள்வது இல்லை. அதன் காரணமாக, மனோகரா கார்னர் சிக்னல் பகுதியில், அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அப்
பகுதி ஸ்தம்பிப்பது தொடர்கிறது. அப்பகுதியில் விபத்துகளும் ஏற்படுகிறது. மக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், வரும் அக்., 31ல் தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க, நாள்தோறும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஜவஹர் பஜார், மனோகரா கார்னர் பகுதிக்கு வருவர். மேலும், ஜவஹர் பஜாரில் உள்ள சில வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு, பல மணி நேரத்துக்கு பின்னர் தான் வருவர். அப்போது வர்த்தக நிறுவனங்கள் முன்னால், நிறுத்தப்படும் வாகனங்களை கரூர் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கரூர் ஜவஹர் பஜாரில், சாலையில் வாகனங்கள் நிற்க காரணமாக உள்ள வர்த்தக நிறுவனங்கள் மீதும், ஸ்டாப் இல்லாத இடங்களில் மினி பஸ்களை நிறுத்தும் டிரைவர்கள் மீதும், கரூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.