/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர் தின விழா விருது திருக்குறள் பேரவை அழைப்பு
/
ஆசிரியர் தின விழா விருது திருக்குறள் பேரவை அழைப்பு
ஆசிரியர் தின விழா விருது திருக்குறள் பேரவை அழைப்பு
ஆசிரியர் தின விழா விருது திருக்குறள் பேரவை அழைப்பு
ADDED : ஆக 01, 2024 07:28 AM
கரூர்: 'ஆசிரியர் தின விழா விருதுபெற கரூர் மாவட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலைபழநியப்பன் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், திருக்குறள் பேரவை இணைந்து, ஆசிரியர் தின விழாவை முன்-னிட்டு கரூர் மாவட்டத்தை சேர்ந்த துவக்கப்பள்ளி முதல் மேல்நி-லைப்பள்ளி வரையிலான, 20 சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெ-டுத்து, ஆசிரிய மாமணி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விரு-துக்கு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு பள்-ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும்.
ஏற்கெனவே மத்திய, மாநில அரசு விருது பெற்றோர் விண்ணப்-பிக்க வேண்டாம். விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சலிலோ வரும் ஆக. 15-க்குள், 'திருக்குறள் பேரவை, 72. சீனிவாசபுரம், கரூர் -- 639 001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94435 93651 என்ற எண்ணில் தொடர்பு கொள்-ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.