/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி 'டிட்டோஜாக்' ஆயத்த மாநாடு
/
கோரிக்கைகளை வலியுறுத்தி 'டிட்டோஜாக்' ஆயத்த மாநாடு
ADDED : செப் 02, 2024 03:02 AM
கரூர்: கரூர் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 'டிட்டோஜாக்' சார்பில், ஆயத்த மாநாடு நடந்தது. இதில், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். அரசாணை, 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்-டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதியம் முரண்பாடு நீக்கிடுதல், கற்பித்தல் தவிர பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது என்பன உள்பட, 31 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 10ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செய-லாளர் ஜெயராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி உள்பட
பலர் பங்கேற்றனர்.