/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐ.நா. அமைதி படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்
/
ஐ.நா. அமைதி படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும்
ADDED : ஆக 13, 2024 06:11 AM
கரூர்: வங்கதேசத்தில், இந்துகளை பாதுகாக்க ஐ.நா. மூலம் அமைதி படை அனுப்ப வேண்டும் என, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மணி, கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது:
வங்கதேசத்தில் நடப்பது, இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரம் என முதலில் செய்திகள் தெரிவித்தாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அதன் பின்புலம் வேறு-மாதிரி இருக்கிறது. இந்துக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களின் நிறுவனங்கள் சூறையாடப்படு-கின்றன. வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாகின்றன. இந்துகள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே ஐ.நா. சபை தலை-யிட்டு, வங்கதேசத்துக்கு அமைதி படை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

