/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொத்தமல்லி சாகுபடிபணிகளில் விவசாயிகள்
/
கொத்தமல்லி சாகுபடிபணிகளில் விவசாயிகள்
ADDED : பிப் 22, 2025 01:44 AM
கொத்தமல்லி சாகுபடிபணிகளில் விவசாயிகள்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், சரவணபுரம், குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, இரும்பூதிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். கொத்தமல்லி செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது.
வெயிலுக்கு செடிகள் வளர்ந்து வருவதால், விவசாயிகள் பறித்து சிறிய கட்டுகளாக கட்டி உள்ளூர் மற்றும் கரூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்படும் மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர். தற்போது கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.