/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அறிவியல் இயக்கம்பொதுக்குழு கூட்டம்
/
அறிவியல் இயக்கம்பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 10, 2025 01:20 AM
அறிவியல் இயக்கம்பொதுக்குழு கூட்டம்
கரூர்தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், பொதுக்குழு கூட்டம், தலைவர் பாஸ்கரன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், கரூரில் சட்டக்கல்லுாரி அமைக்க வேண்டும். கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும். கரூரில் முக்கிய வழித்தடங்களில் பெண்களுக்கு தனி பஸ் இயக்க வேண்டும். பஞ்சப்பட்டி, தாதம்பாளையம், வெள்ளியணை ஏரிகளுக்கு, காவிரி உபரி நீரை கொண்டு செல்ல வேண்டும். மருதுார் - உமையாள்புரம் வரை, காவிரியாற்றில் கதவணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணைத்தலைவர் பொன் ஜெயராம், மாவட்ட செயலாளர் ஜான் பாஷா, துணை செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் தமிழரசி, துளிர் இதழ் பொறுப்பாளர் திலகவதி உள்பட பலர் பங்கேற்றனர்.