ADDED : மார் 19, 2025 01:10 AM
அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
குளித்தலை:குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில் நடந்தத. நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் குளித்தலை இந்துமதி, கிருஷ்ணராயபுரம் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள வார்டு வாரியாக ஓட்டுச்சாவடி மையம் அமைத்தது போல், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் அமைக்க வேண்டும். இறந்து போன வாக்காளர்கள் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும்.
பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்காமல் உள்ள பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும். வாக்காளர்கள் எளிதில் ஓட்டளிக்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளி, அரசு கட்டடங்களில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, அனைத்து கட்சியினர் சார்பிலும் முன் வைத்தனர். இதில், தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ஜ.,-நா.த.க.,-தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.