/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்தரிக்காய் சாகுபடி பணிவிவசாயிகள் மும்முரம்
/
கத்தரிக்காய் சாகுபடி பணிவிவசாயிகள் மும்முரம்
ADDED : மார் 20, 2025 01:15 AM
கத்தரிக்காய் சாகுபடி பணிவிவசாயிகள் மும்முரம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்தரிக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரியபாளையம், வயலுார், பஞ்சப்பட்டி, கோவக்குளம், சிவாயம், வேப்பங்குடி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, வேங்காம் பட்டி, புதுப்பட்டி, சரவணபுரம், குழந்தைபட்டி பகுதிகளில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அதிகமாக கத்தரிக்காய் சாகுபடி நடந்து வருகிறது. செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்துள்ளது. காய்கள் பறிக்கப்பட்டு, உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்று வருகின்றனர். நேற்று கத்தரிக்காய் கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.