/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும்
/
தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும்
ADDED : மார் 21, 2025 01:56 AM
தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும்
கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி நெடுஞ்சாலை அருகில், குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் சேகரித்து சிந்தலவாடி மேம்பாலம் கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை அருகில் கொட்டப்படுகிறது.
இதனால் சாலையோரம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பழைய கழிவு குப்பை, கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில், தெரு நாய்கள் சுற்றி திரிகிறது. தெரு நாய்கள் நடமாட்டத்தால், அவ்வழியாக மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.