/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது
/
மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது
ADDED : ஏப் 02, 2025 01:23 AM
மனைவியை கத்தியால்குத்திய கணவர் கைது
கரூர்:கரூர் அருகே, குடும்ப தகராறில் மனைவி, மச்சானை கத்தியால் குத்தியவரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், ராயனுார் பகுதியை சேர்ந்தவர் கலையரசன், 43; இவருடைய மனைவி மஞ்சுளா, 40; இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், மஞ்சுளாவின் வீட்டுக்கு அவரது தம்பி சக்திவேல், 38, சென்றுள்ளார். அப்போது, கலையரசனுக்கும், சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த கலையரசன், மனைவி மஞ்சுளா மற்றும் மச்சான்
சக்திவேலுவை கத்தியால் குத்தியுள்ளார். அதில், படுகாயமடைந்த மஞ்சுளா, சக்திவேல் ஆகிய இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, மஞ்சுளா கொடுத்த புகார்படி, கலையரசனை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

