ADDED : ஏப் 05, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநில அளவிலான செஸ் போட்டி
கரூர்:ஆனந்த் அகாடமி சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டி, கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில், 10, 12, 17 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஓபன் பிரிவு என, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இறுதி சுற்றில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மொத்த பரிசாக ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய், பரிசு கோப்பை மற்றும் சான்றுகளை, தொழில் அதிபர் அட்லஸ் நாச்சிமுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை, ஆனந்த் அகாடமி செயலாளரும், செஸ் பயிற்சியாளருளமான ஆனந்த் செய்திருந்தார்.

