/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணவாசி பஞ்சாயத்தில்சுகாதார வளாகம் மோசம்
/
மணவாசி பஞ்சாயத்தில்சுகாதார வளாகம் மோசம்
ADDED : ஏப் 06, 2025 01:25 AM
மணவாசி பஞ்சாயத்தில்சுகாதார வளாகம் மோசம்
கிருஷ்ணராயபுரம்:கோரக்குத்தி சாலை அருகே உள்ள சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத அளவுக்கு படுமோசமாக உள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்சாயத்து, கோரக்குத்தி கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்காததால், குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும், அறை கதவுகளில் தாழ்பாள் இல்லாமல் உள்ளன. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கட்டடம் ஆங்காங்கே விரிசலடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்., நிர்வாகம் இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.