ADDED : ஏப் 06, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டு: முதியவர் கைது
கரூர்:கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 63; மண்டிக்கடை மேலாளர். இவர் நேற்று முன்தினம் கரூர், 80 அடி சாலையில் உள்ள, கனரா வங்கி முன் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கோவிந்தராஜ் சென்ற போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, கோவிந்தராஜ் போலீசில் புகார் செய்தார். இதைய டுத்து, கோவிந்தராஜின் பைக்கை திருடியதாக, திருப்பூரை சேர்ந்த வேணு கோபால், 58; என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

