/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை தெப்பக்குளத்தில் காட்சியளித்த ரத்தினகிரீஸ்வரர்
/
குளித்தலை தெப்பக்குளத்தில் காட்சியளித்த ரத்தினகிரீஸ்வரர்
குளித்தலை தெப்பக்குளத்தில் காட்சியளித்த ரத்தினகிரீஸ்வரர்
குளித்தலை தெப்பக்குளத்தில் காட்சியளித்த ரத்தினகிரீஸ்வரர்
ADDED : ஏப் 12, 2025 01:26 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. மலை உச்சியில் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் சிவத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள தெப்பக்குளத்தில், பங்குனி மாத தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி உற்சவரை, சிவ பக்தர்கள் அய்யர் மலையில் இருந்து, குளித்தலைக்கு தங்கள் தோளில் துாக்கியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின் மணத்தட்டை, வைகைநல்லுார், அக்ரஹாரம் வழியாக வந்து, கடம்பவனேஸ்வரர் வினாயகர் கோவில் வந்தடைந்தனர்.
தொடர்ந்து, சுவாமிகளை கோவில் ஊழியர்கள் தலைசுமையாக துாக்கி, எம்.எஸ். அக்ரஹாரம் வழியாக தெப்பக்குளம் வந்தடைந்தனர். சுவாமிகள் தெப்பக்குளம் வந்தடைந்ததும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில், சுவாமி உற்சவர் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர், மூன்று முறை வலம் வந்து தெப்பத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில், ஊஞ்சலில் எழுந்தருளிய சிவபெருமான், அம்பாளுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றது. தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவில் ஹிந்து சமய அறநிலைத்துறை திருப்பூர் மண்டல உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.