/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்
/
சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்
ADDED : மே 06, 2025 02:09 AM
அரவக்குறிச்சி:
கோடை கால வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகம்பள்ளி, கொடையூர், வெஞ்சமாங்கூடலுார், புங்கம்பாடி மேல்பாகம், கீழ்பாகம், கோவிலுார், எருமார்பட்டி, ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆலமரத்துப்பட்டி, வேலம்பாடி, சாந்தப்பாடி, சேந்தமங்கலம் கீழ்பாகம், மேல்பாகம் உள்ளிட்ட 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சிறு சிறு குளங்கள் உள்ளன. மேலும் நெல்லிக்கோம்பை, சாந்தப்பாடி, அஞ்சாகவுண்டனுார் ஆகிய கிராமங்களில், சற்று பெரிய குளங்களும் உள்ளன.
மழை காலங்களில் பெய்யும் மழை நீர், இக்குளங்களில் தேங்கி நிற்பதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளின் கிணறுகள், வீடு, தோட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். இப்பகுதியில் ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட குளங்கள் சிதிலமடைந்து நீர் இல்லாமல் மழை காலங்களில் பெய்யும் நீரை சேமிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே, கோடை காலத்தை பயன்படுத்தி குளங்களை துார்வார விவசாயிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.